

சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் வந்தே மாதரம் பாடலுடன் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா தொடங்கியது. முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களானது இதுவே முதல்முறை, இது வரவேற்கத்தக்கது.
* அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பளித்தால் எங்கள் ஆதரவை நிச்சயம் மறுபரிசீலனை செய்வோம்.
* தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது பாடப்படுவது குறித்து முதல்வரிடம் கேட்டபோது, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மத்திய அரசின் உத்தரவுப்படி வந்தே மாதரம் தான் முதலில் பாடப்படும் என முதலமைச்சர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.