பொறுமை காக்க வேண்டும், சோர்ந்து விடக்கூடாது: தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு செங்கோட்டையன் அறிவுரை

த.வெ.க. தலைவர் விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
பொறுமை காக்க வேண்டும், சோர்ந்து விடக்கூடாது: தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு செங்கோட்டையன் அறிவுரை
Published on: 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சியை அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்காதது கண்டனத்துக்குள்ளாகி உள்ளது. இதுதொடர்பாக இன்று 2 முறையாக த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்துள்ளார்.

இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும், பொறுமை காக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் சோர்ந்து போய்விடக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com