விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்.. எனக்கு பின்னால் இருப்பவர்கள்- சீமான் ஆவேசம்

விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்.அவர்களது அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன்.
விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்.. எனக்கு பின்னால் இருப்பவர்கள்- சீமான் ஆவேசம்
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது.

அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வரத்தொடங்கினர்.

இந்நிலையில் விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள். எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில் காங்கிரஸ் கட்சியைதான் எதிர்க்க வேண்டும். ஊழல் என தெரிவித்தால் ஊழலுக்காக சிறை சென்ற கட்சி ஒன்று உள்ளது அதை எதிர்க்க வேண்டும். விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள். எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள். அவர்கள் அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன்.

என சீமான் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com