நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை செயல்பாட்டு வரைவு என்ற பெயரில் நாளை வெளியிடப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறார் சீமான்
Published on

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை செயல்பாட்டு வரைவு என்ற பெயரில் நாளை வெளியிடப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் வைத்து காலை 10 மணி அளவில் தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட உள்ளார்.

ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகளில் இலவச அறிவிப்புகள் எதுவும் இருக்காது. அதை தாண்டி வேளாண் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாகவும், வேலைவாய்ப்பை பெருக்குவது குறித்த அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கும்.

நாளை வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையிலும் அது போன்ற விஷயங்கள் பிரதானமாக இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com