

'We The Leaders' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முறைகேடு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிந்து சோதனை நடத்தியதை வரவேற்கிறேன்.
குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என மனதார நம்புகிறேன்.
எ.வ.வேலு மட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ஊழல்களை தவெக அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
பிஜிஆர் எனர்ஜி ஊழல், ஊட்டச்சத்து கிட் ஊழல், பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது.
பிரதிபலிப்பு, பின்புற அடையாள தகடுகள் கொள்முதல் செய்ததில் ஊழல் என போக்குவரத்துத்துறையில் பல ஊழல்கள்.
தமிழ்நாடு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊழல், பூச்சிக்கொல்லிகள் கொள்முதல் செய்ததில் ஊழல்.
திமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. தவெக அரசு விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயநிதி ரசிகர் மன்றமும் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனமும் ஒரே முகவரியில் இயங்குவதை குறிப்பிட்டு அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் துபாய்க்கு சென்று வந்த உடனேயே ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்படும் என நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் அறிவித்தது எப்படி?
ரூ.1000 கோடி முதலீடு அறிவிப்பும் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.