அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ்!

சபரீசன் அரசுப் பொறுப்பிலோ, திமுகவின் எந்தவிதமான கட்சிப் பொறுப்பிலோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமராக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ்!
Published on

திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வேதமூர்த்தி, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் இருவரும் சபரீசன் குறித்து பேசிவரும் நிலையில், உள்நோக்கத்துடன் தன்னைக் குறித்து கூறிய அவதூறு கருத்துகளை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்புக் கோரவேண்டும் என நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவரின் மருமகன் என்பதால் தன்னைக் குறித்து அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் அவதூறு கருத்துகளை வெளியிடமாட்டோம் என உறுதிமொழி அளிக்கவேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் 15 நாட்களுக்குள் செய்யத் தவறினால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com