கிராம சபைக் கூட்டங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.கிராம சபை கூட்டம் நடைபெறும்போது, கிராம மக்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஏற்க வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
Published on

மதுரை:

திருச்சி துறையூரை சேர்ந்த குருநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். 7 நாளுக்கு முன்னதாக, கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள், இடம் குறித்து தொடர்புடைய விபரங்கள் கிராம ஊராட்சிகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

கிராம சபை கூட்டம் நடைபெறும்போது, கிராம மக்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஏற்க வேண்டும். இந்த பணிகளை அந்த பகுதி தாசில்தார் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இது குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. எனவே, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன், விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், அனைத்து கிராம சபை கூட்டமும் உரிய விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? என தாசில்தார்கள் ஆய்வு செய்கிறார்களா? என தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com