

மேற்கு வங்கத்தில் தேர்தல் தொடர்பான மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். அவரது வீ்ட்டிற்கு ஆறுதல் கூறுவதற்காக அக்கட்சியின் எம்.பி.யும், மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி இன்று காலை சென்றார்.
அப்போது கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்து சென்றார். அவரை உள்ளூரைச் சேர்ந்த சிலர் வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அவர் மீது முட்டைகளை வீசினர். கற்களையும் வீசினர். அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதில் அபிஷேக் பானர்ஜி காயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனயைில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் “ஆட்சியாளரக்ள் கொலையாளி ஆனார்கள். பாஜக-வுக்கு வெக்கமா இல்லையா?“ எனத் தெரிவித்துள்ளார்.