பெண்கள் மீது கடுகளவு அக்கறையும் இல்லாத கூட்டம் ஆர்எஸ்எஸ் - பாஜக: பெ.சண்முகம்

பாஜக கட்சியினர் திசை திருப்புவதில் வல்லவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
பெண்கள் மீது கடுகளவு அக்கறையும் இல்லாத கூட்டம் ஆர்எஸ்எஸ் - பாஜக: பெ.சண்முகம்
Published on

ஆர்எஸ்எஸ் – பாஜக வடிப்பது முதலைக் கண்ணீர் என்பதை இந்திய தாய்மார்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கு சட்டப்படி இட ஒதுக்கீடு கிடைப்பதை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டதாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கசிந்து உருகுகின்றனர்.

பெண்கள் மீது கடுகளவு அக்கறையும் இல்லாத கூட்டம் தான் ஆர்எஸ்எஸ் – பாஜக என்பதையும், இவர்கள் வடிப்பது முதலைக் கண்ணீர் என்பதையும் இந்திய தாய்மார்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருக்கிறது என்றால் இப்போது உள்ள 543 இடங்களில் 33 சதவீதம் வழங்கத் தயாரா?

பாஜக கட்சியினர் திசை திருப்புவதில் வல்லவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com