வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000.. இளைஞர்களுக்கான த.வெ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்

இளைஞர்களின் கல்வியை உறுதி செய்ய கல்லூரி முதல் Ph.D. வரை கல்வி பயில பிணையில்லா கடனாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000..  இளைஞர்களுக்கான த.வெ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்
Published on

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் ஓட்டலில் த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்கள் அறிமுகத்திற்கு முன்பாக த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார்.

அப்போது அவர் இளைஞர்களுக்கான தவெக தேர்தல் அறிக்கையை அவர் வாசித்தார்.

அதில், "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு மன்றம் அமைக்கப்படும்.

இளைஞர்களின் கல்வியை உறுதி செய்ய கல்லூரி முதல் Ph.D. வரை கல்வி பயில பிணையில்லா கடனாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும்.

29 வயதிற்கு மேல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

5 லட்சம் பேருக்கு இன்டன்ஷிப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

TNPSC, TRB, TNEB-க்களில் காலதாமதம் இல்லாமல் போட்டி தேர்வுகள் நடத்தப்படும்.

இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்கள் குறித்து கரத்து தெரிவிக்க ஏற்பாடு

தனியார் நிறுவனத்தில் 75 சதவீத மாநில மக்களுக்கு பணி வழங்கினால் GST, மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

முதல்வர் மக்கள் சேவை மெம்பர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும்.

இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை லோன் வழங்கப்படும்" ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com