RMC Chennai| வெயிலின் தாக்கம் 5 நாட்கள் அதிகரிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக இனி அதிகரிக்கும்.
RMC Chennai| வெயிலின் தாக்கம் 5 நாட்கள் அதிகரிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. 10 மாவட்டங்களுக்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.

வேலூரில் 104 டிகிரி வெயில் நேற்று பதிவானது. இதற்கிடையில் ஒரு சில பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இடியுடன் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 2, 3 செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரியிடம் கேட்டபோது, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக இனி அதிகரிக்கும். இன்றும் வெயில் தாக்கம் கூடுதலாக இருக்கும். 4 அல்லது 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் சற்று உயரக்கூடும். வெப்ப அலை பாதிப்பு இல்லை. ஒரு சில இடங்களில் கோடை மழையும் பெய்யக் கூடும்.

சென்னையை பொருத்தவரை இயல்பை விட சற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com