எழும்பூரில் புனரமைப்பு பணி - 5, 6-ந்தேதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
எழும்பூரில் புனரமைப்பு பணி - 5, 6-ந்தேதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்
Published on

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து 11 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, வருகிற ஏப்ரல் 5-ந்தேதி இயக்கப்படும் ராமேசுவரம்-சென்னை எழும்பூர் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752), தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16866), கொல்லம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (20636) ஆகியவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ஏப்ரல் 6-ந்தேதி இயக்கப்படும் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (12632), சென்னை எழும்பூர்-ராமேசுவரம் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (12661), சென்னை எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), சென்னை எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) ஆகியவை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரெயில்கள் தாம்பரம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட மாட்டாது.

ஏப்ரல் 6-ந்தேதி சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675) சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com