Ramadoss | யாருடன் தேர்தல் கூட்டணி? - ராமதாஸ் இன்று முக்கிய ஆலோசனை

தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் நேர்காணல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Ramadoss | யாருடன் தேர்தல் கூட்டணி? - ராமதாஸ் இன்று முக்கிய ஆலோசனை
Published on

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது. திமுக, அதிமுக கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் நேர்காணல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அஇபுதமமுக தொண்டர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என சசிகலா அறிவித்துள்ளார். ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசோ இன்னும் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமயில் இன்று நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது. இந்த நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசித்து முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com