5 பேர்கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தனது தரப்பு பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.
5 பேர்கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பிரிவும், வி.கே. சசிகலா தொடங்கியுள்ள அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதில் ராமதாஸ் தரப்பு வட மாவட்டங்களில் சுமார் 40 இடங்களிலும், சசிகலாவின் கட்சி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சுமார் 60 இடங்களிலும் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று 23 பேர்கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சசிகலா. இந்நிலையில் இன்று 5 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.

அதன்படி சேலம் மேற்கில் அருளும், கும்பகோணத்தில் ஸ்டாலின், விருத்தாசலத்தில் சுரேஷ், வந்தவாசி முரளி சங்கர், மயிலாடுதுறையில் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com