

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று காலை தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பலரும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் குவிந்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து புறப்பட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்துள்ளார். இதனை தொடர்ந்து பதவியேற்பு விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டுள்ளார்.
பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.