பிரதமரின் சுற்றுப்பயணங்கள்- வெற்றுப் பயணங்களே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர், தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.
பிரதமரின் சுற்றுப்பயணங்கள்- வெற்றுப் பயணங்களே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர், இப்போது அடிக்கடி வருகிறாரே அதற்கு என்ன காரணம் ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்கள் வெறும் வெற்றுப் பயணங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் - வெற்றுப்பயணங்களே!

பேரிடர் காலங்களில் கூட தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட மாண்புமிகு பிரதமர் தற்போது வெறும் கையில் முழம் போடலாமா?

நிதிதான் மாநிலங்களின் ஆக்சிஜன். அதையே நிறுத்திவிட்டுத் தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?

ஜல்ஜீவன், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்க, அதில் பிரதமர் தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது நியாயமா?

பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com