சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு- போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சந்திரசேகர் பணிபுரிந்து வருகிறார்.உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு- போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரசேகர். இவர் சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உடந்தையாக இருந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு புகார் வந்தது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்கடர் சந்திரசேகர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com