திருச்சியில் விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி!

திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அம்மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சியில் விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி!
Published on

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அங்கு பிரச்சாரமும் செய்தார்.

இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து திருச்சியில் பிரச்சாரமும் செய்கிறார். இதற்காக தவெக தரப்பில் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் பிரசாரத்திற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று பொதுமக்களுக்கும், விஜய்யின் வாகன அணிவகுப்பிற்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வில்லிவாக்கம், அண்ணா நகர் தொகுதிகளில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com