

தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 489 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்- 98.96 சதவீதம்
ஆங்கிலம்- 98.74 சதவீதம்
இயற்பியல்- 98.87 சதவீதம்
வேதியியல்- 98.82 சதவீதம்
விலங்கியல் - 98.69 சதவீதம்
தமிழ் பாடத்தில் 83 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆங்கில மொழிப்பாடத்தில் 21 மாணவ, மாணவிகள் சதம் அடித்துள்ளனர்.
கணிதப்பாடத்தில் 732 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
கணினி அறிவியல்- 6,975, வணிகவியல்-683, கணக்கு பதிவியல்-1,946, பொருளியல்- 440 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு 95.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்த அடைந்த நிலையில் இந்தாண்டு 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.