பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்

மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் , 98.05 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாம் இடமும், 97.63 சதவீதத்துடன் கன்னியாகுமரி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்
Published on: 

தமிழ்நாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இத்ததேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் , 98.05 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாம் இடமும், 97.63 சதவீதத்துடன் கன்னியாகுமரி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

வருகிற 13-ந்தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com