Public Exam| பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியிடப்பட உள்ளன.
Public Exam| பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
Published on

சென்னை:

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ந்தேதி தொடங்கி 26-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு விடைத்தாள்கள் பிரித்து, திருத்துதல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து திருத்துதல் பணிகளை நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டது.

அதன்பின் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக விடைத்தாள் திருத்துதல் பணி கடந்த 6-ந்தேதியே தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்தது. அதன் படி பிளஸ்-2, பிளஸ்-1 அரியர் தேர்வு விடைத்தாள் திருத்துதல் தமிழகம் முழுவதும் உள்ள 83 முகாம்களில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் முதன்மை தேர்வாளர்கள் திருத்துதல் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது விடைக்குறிப்பு சரியாக இருக்கிறதா, அதில் ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டுமா என்று சோதனை செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை இதர ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தி முடிப்பார்கள். இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இதனை தொடர்ந்து பிளஸ்-1 அரியர் தேர்வு விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. அதன்பின் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியிடப்பட உள்ளன.

திருத்துதல் பணியின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com