தி.மு.க. ஆட்சியில் தனிநபர் வருமானம் உயர்வு

தமிழ்நாடு வரலாற்றில் மிக வேகமான தனிநபர் வருமான வளர்ச்சி காலமாக (19.4சதவீதம்) பதிவாகியுள்ளது.கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தனிநபர் வருமானம் முன்னேறி சாதித்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில் தனிநபர் வருமானம் உயர்வு
Published on

சென்னை:

தி.மு.க. சார்பில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

வளர்ச்சி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலான ஆட்சி, அதுவே திராவிட மாடல்.

கடந்த 4 ஆண்டுகளில் (2021-2025), தனிநபர் வருமானம் ரூ.1.78 லட்சம் உயர்ந்து, வரலாற்றிலேயே அதிகமான ரூ.3.62 லட்சம் என்ற நிலையை எட்டியுள்ளது. இது தமிழ்நாடு வரலாற்றில் மிக வேகமான தனிநபர் வருமான வளர்ச்சி காலமாக (19.4சதவீதம்) பதிவாகியுள்ளது.

20 ஆண்டுகளாக ஏற்பட்ட முன்னேற்ற அளவிற்கு சமமாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தனிநபர் வருமானம் முன்னேறி சாதித்துள்ளது.

தொழில் விரிவாக்கம், முதலீட்டை மையமாகக் கொண்ட வளர்ச்சி, மற்றும் மக்களின் வாங்கும் திறனை உயர்த்தும் நலத்திட்டங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய ஆட்சியின் நேரடி விளைவுதான் இந்த முன்னேற்றம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com