மின்வெட்டு பிரச்சனையில் நம்பர் 1 தொகுதி பெரம்பூர்..!- உதயநிதி ஸ்டாலின்

மின்வெட்டு ஏற்பட்ட 125 இடங்களில் 500 பேர் மூலமாக ஆய்வு செய்து நடவடிக்கை..
Udhayanithi stalin
Published on

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதா?. அண்ணன் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிற்கே பவர் போய் விட்டது என பேசிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே மின்வெட்டு பிரச்சனையில் நம்பர் 1 தொகுதி பெரம்பூர் தொகுதி தான். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் மின்வெட்டு பிரச்சனையில் பெரம்பூர் தொகுதி முதலிடம்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மின்வெட்டு, பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். வழக்கமான மழைக்காலத்தில் தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பார்கள். மின்சாரம் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய நிலை த.வெ.க. ஆட்சியில் இருக்கிறது. மின் வெட்டு பிரச்சனையால் விசிக தலைவர் திருமாவளவனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். திமுக ஆட்சியில் இல்லாத மின்வெட்டு தவெக ஆட்சியில் ஏற்பட என்ன காரணம்?

அமைச்சர் CTR நிர்மல்குமார்: மின்துறை ஏன் இப்படி உள்ளது என ஏற்கனவே அறிவித்துவிட்டோம், நாள்தோறும் இதற்கு நடவடிக்கையும் எடுக்கிறோம். ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மின்துறை உள்ளது. ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளன. 10 நாட்களில் மின்வெட்டு ஏற்பட்ட 125 இடங்களில் 500 பேர் மூலமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி: மின் தேவை அதிகரிக்கும்போது அதை நிவர்த்தி செய்வது அரசின் கடமை. மின்சாரத்துறை சார்பில் ஒரு ஆய்வுக் கூட்டத்தை கூட நடத்தவில்லையே ?

அமைச்சர் CTR நிர்மல்குமார்: கடந்த ஆட்சியில் அறிவிப்புகளை மட்டுமே செய்துள்ளார்கள். வேறு எதுவும் இல்லை. மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கை 2 நாட்களில் வெளியிடப்படும். திமுக ஆட்சியில் வெறும் அறிவிப்புகள் தான் வெளியிடப்பட்டுள்ளது. நிறைவேற்றப்படவில்லை.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி: அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.

சிவசங்கர்: எவ்வளவு கோடி கடன் இருந்தாலும் பொதுமக்களுக்கு மின் விநியோகம் சென்று சேர வேண்டும். கடந்த கால ஆட்சியில் இதே பிரச்சனையோடு தான் மின் விநியோகம் செய்தோம். பியூஸ் கேரியர் பகலில் பிடுங்கப்படுகிறது. ஆனால் இரவில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com