மறைமுக அரசியல் அல்ல, வெளிப்படையான ஆதரவே மக்களின் நம்பிக்கை- பிரேமலதா விஜயகாந்த்

தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மறைமுக அரசியல் அல்ல, வெளிப்படையான ஆதரவே மக்களின் நம்பிக்கை- பிரேமலதா விஜயகாந்த்
Published on

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறைமுக அரசியல் அல்ல, வெளிப்படையான ஆதரவே மக்களின் நம்பிக்கை

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சேர்ந்தவர்கள் எவ்வாறு நிபந்தனை இல்லாத ஆதரவு' என்று வெளிப்படையாக தெரிவித்தார்களோ, அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அப்போது தான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள்.

மேலும், முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?" என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, அதற்கு பின்பு எந்தவிதமான குதிரை போமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com