நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரவேற்பு - வந்தே பாரத் ரெயில்களை விரும்பும் பயணிகள்

கடைசி நிமிடத்தில் பயணம் செய்பவர்கள் எளிதாக முன்பதிவு செய்வதை உறுதி செய்கிறது.
Vande Bharat train
Published on

2025-26 ஆண்டில் தெற்கு ரெயில்வேயின் 24 வந்தே பாரத் ரெயில் சேவைகள் மூலம் 77.38 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கி வருகிறது.

இந்த ரெயில்களுக்கு பயணிகளிடம் தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஆகிய இரண்டும் ஆண்டுதோறும் நிலையான வளர்ச்சியை பதிவு செய்து உள்ளன. 2025-26 ஆண்டில் தெற்கு ரெயில்வேயின் 24 வந்தே பாரத் ரெயில் சேவைகள் மூலம் 77.38 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் ரூ.803.86 கோடி வருவாயை ஈட்டி உள்ளன. மங்களூர்- திருவனந்தபுரம், எழும்பூர்- நாகர்கோவில், காசர்கோடு-திருவனந்தபுரம் ஆகிய வந்தே பாரத் ரெயில்கள் முன்பதிவு 100 சதவீதத்தை கடந்துள்ளது.

நடப்பாண்டில் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் இந்த ரெயில்கள் 15.21 லட்சம் பயணிகளை ஏற்றி சென்று ரூ.162.96 கோடி வருவாய் ஈட்டி உள்ளன. நடப்பு முன்பதிவு முயற்சி மூலம் ரெயில்கள் நிரம்பி இருப்பதையும் கடைசி நிமிட பயணங்கள் சிரமம் என்று இருப்பதையும் உறுதி செய்துள்ளது. ரெயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை புறப்படும் நிலையங்களிலும் மற்றும் அருகில் உள்ள அனைத்து நிலையங்களிலும் காலியாக உள்ள இடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடைசி நிமிடத்தில் பயணம் செய்பவர்கள் எளிதாக முன்பதிவு செய்வதை உறுதி செய்கிறது. நாளுக்கு நாள் வந்தே பாரத் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com