சென்னையிலேயே 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக தயாராகி வரும் பனகல் பார்க் ரெயில் நிலையம்

பனகல் பார்க் ஸ்டேஷனில் பயணிகள் அதிகமாக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டேஷனில் ஐந்து நுழைவு பகுதிகளை அமைக்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையிலேயே 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக தயாராகி வரும் பனகல் பார்க் ரெயில் நிலையம்
Published on

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் பனகல் பார்க் ஸ்டேஷனில் பயணிகள் அதிகமாக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்டேஷனில் ஐந்து நுழைவு பகுதிகளை அமைக்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில் வழித்தடம் 3 மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ நீளத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் அமைக்கப்பட உள்ளன. இதில் கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ மிக முக்கியமான ரூட்டாக பார்க்கப்படுகிறது.

இந்த ரூட்டில் தான் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் பனகல் பூங்கா மெட்ரோ ரெயில் நிலையம் வரவுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள பனகல் பூங்கா ரெயில்வே ஸ்டேஷன் சுரங்கத்தில் அமைகிறது. பனகல் பூங்கா ஸ்டேஷனை பொறுத்தவரை மிக முக்கியமான ஸ்டேஷன்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சென்னையிலேயே 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரெயில் நிலையம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்திலும், பூமிக்கு அடியில் 320 மீட்டர் நீளத்திற்கும் கட்டப்பட்டு வரும் நிலையம், ஒரே நேரத்தில் 5000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைகிறது.

தி.நகர் சென்னையின் மிக முக்கியமான வர்த்தக பகுதியாக உள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் இங்கு எப்போதுமே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பிரமாண்டமாக இந்த மெட் ரோ ரெயில் நிலையம் அமைகிறது. வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com