விசிகவில் இருந்து விலகிய பனையூர் பாபு திமுகவில் இணைவு!

திருமாவளவனின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து விலகினார் பனையூர் பாபு.
விசிகவில் இருந்து விலகிய பனையூர் பாபு திமுகவில் இணைந்தார்!
Published on

விசிகவின் செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

தலைவர் திருமாவளவனின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அவருடன் சேர்ந்து அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com