மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா? - மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.நேற்று மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை.
மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா? - மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
Published on

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

2023ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த கலவரத்தில்

* 258 பேர் உயிரிழந்தனர்

* 1,108 பேர் காயமடைந்தனர்

* 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன

* 60,000 பேர் இடம் பெயர்ந்தனர்

* பல்லாயிரம் பேர் அகதிகள் முகாம்களில் இன்றும் இருக்கின்றனர்

இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

நேற்று மணிப்பூர் சென்ற மோடி ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை, இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை.

ரூ 7,300 கோடி திட்டங்கள், ரூ 1,200 கோடி திட்டங்கள் என்று மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா? என்று வினவியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com