தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகள் தேவைக்கேற்ப 735 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை:

வார விடுமுறை நாட்களோடு வருகிற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையும் வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களோடு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10 மற்றும் 11-ந்தேதியில் சிறப்பு பஸ்கள் 970, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 24 பஸ்களும் விடப்பட்டுள்ளது.

இது தவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகள் தேவைக்கேற்ப 735 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com