ஜூன் 4-ல் திறப்பு... பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பள்ளி நுழைவுவாயிலிலும் கட்டண விவரங்களை அறிவிப்புப் பலகையாக வெளியிட வேண்டும்.
ஜூன் 4-ல் திறப்பு... பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
Published on

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வருகிற 4-ந்தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்பு பள்ளிகள் செயல்பட இருக்கிறது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கபட உள்ளதை தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறை சுத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, அனைத்து விதமான பள்ளிகளுக்கும் மாநில தகவல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பள்ளி நுழைவுவாயிலிலும் கட்டண விவரங்களை அறிவிப்புப் பலகையாக வெளியிட வேண்டும். இதன் மூலம் பெற்றோர்கள் கல்விக் கட்டண விவரங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com