‘எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மக்களிடம் பகிர்வதில்லை... நட்டத்தை மட்டும் பகிர்கின்றன’ - மாணிக்கம் தாகூர்

எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் 7 காலாண்டு லாபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
‘எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மக்களிடம் பகிர்வதில்லை... நட்டத்தை மட்டும் பகிர்கின்றன’ - மாணிக்கம் தாகூர்
Published on

நாடு முழுவதும் இன்று பெட்ரோல், டீசல் விலை இரண்டு வாரங்களில் 4வது முறை உயர்ந்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மக்களோடு பகிர்ந்துகொள்வதில்லை, நட்டத்தை மட்டும் பகிர்ந்துகொள்கின்றன என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“எண்ணெய் நிறுவனங்கள் இன்று டீசலில் லிட்டருக்கு ரூ.38 நஷ்டம் அடைவதாக கூறுகின்றன. அப்போது அந்த ரூ.81,000 கோடி எங்கே? IOC + BPCL + HPCL ஆகிய நிறுவனங்கள் மக்கள் லிட்டருக்கு ரூ.100க்கும் மேல் கொடுக்கும்போது 2024 நிதியாண்டில் ரூ.81,000 கோடி லாபம் ஈட்டின.

கடந்த 7 ஏழு ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைந்து வந்தன. ஆனால், நுகர்வோருக்கு (மக்களுக்கு) ஒரு பைசா கூட அதன் பலனைக் கடத்தவில்லை.

2016-ல் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது அவர்கள் உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தி, அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டனர். 2024 நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் சாதனை லாபம் ஈட்டியபோதும், விலைகள் உயர்வாகவே இருந்தன.

2026-ல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் — அடுத்த சில நாட்களிலேயே விலைகள் உயர்த்தப்பட்டுவிட்டன. எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் 7 காலாண்டு லாபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு வந்த நஷ்டத்தை அடுத்த 7 நாட்களிலேயே மக்கள் தலைமேல் சுமத்திவிட்டன.

மோடி கார்ப்பரேட்டுகளுக்காகவே வேலை செய்கிறார் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com