"தவெக-வை புறக்கணித்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது"- நாஞ்சில் சம்பத்

தமிழக வெற்றிக் கழகம் தடைகளை தாண்டி எதிர்நீச்சல் போட்டு வருகிறது.
"தவெக-வை புறக்கணித்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது"- நாஞ்சில் சம்பத்
Published on

தமிழக வெற்றி கழக பிரிவு செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-

வஞ்சகம், வன்மம், வக்ரம், அநீதி, அநியாயம், அக்ரமம், சூது, வாது, பொறாமை, அலட்சியம், அவதூறு ஆகிய படிகளைக் கடந்துதான் ஒரு கட்சி கரைசேர வேண்டும்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தடைகளை தாண்டி எதிர்நீச்சல் போட்டு வருகிறது. நிலத்தை நிராகரித்துவிட்டு நதி நடக்க முடியாது; நீல வானத்தை அலட்சியப் படுத்திவிட்டு நிலவு சிரிக்க முடியாது.

காற்றை கைது செய்துவிட்டு கால் மணி நேரம் கூட உயிர்வாழ முடியாது; தண்ணீரை மறுதலித்துவிட்டு தாகத்திற்கு விடை காண முடியாது; மின்சாரத்தைப் புறக்கணித்துவிட்டு புத்துலகு சமைக்க முடியாது.

தவெகவையும், தளபதி விஜயையும் அலட்சியப்படுத்திவிட்டு அன்னை தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது.

நதிகள் நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது; தேதிகள் கிழிபட உடன்படாவிட்டாலும் நாளை நடக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com