அரசு சான்றிதழ்கள் வாங்க அலையவேண்டாம்: சாதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ID கார்ட் விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!

முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
அரசு சான்றிதழ்கள் வாங்க அலையவேண்டாம்: சாதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ID கார்ட் விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!
Published on

தவெக அமைச்சர் செங்கோட்டையன், தனது சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அத்தொகுதிக்கு செய்யவேண்டிய பணிகளை பட்டியலிட்டு, தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், வருமானம், சாதி, இருப்பிடம் போன்ற சான்றிதழ்களை ஆண்டுதோறும் பெற அலையவேண்டிய சூழலை தவிர்த்து அனைத்து விவரங்களும் அடங்கிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர்,

“பட்டா, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை அனைத்தும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளும் வகையில், அதன் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்.

அனைத்து திட்டங்களையும் இணையம்மூலம் கொண்டுசெல்ல முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் போன்ற ஆதார சான்றிதழ்களை வாங்கும் நடைமுறையை மாற்ற இருக்கிறோம். சான்றிதழிற்குப் பதிலாக அடையாள அட்டை வழங்க இருக்கிறோம்.

முகவரி, சாதி சான்றிதழ், ரத்தவகை, ஆதார் அட்டை, தொலைபேசி அனைத்தும் அந்த அடையாள அட்டையில் இணைக்கப்படும். இந்த அடையாள அட்டையை முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.” என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com