துறையூர் அருகே 19 பேர் பலியான வெடிமருந்து தொழிற்சாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

மத்திய அரசின் வெடிபொருள் விவகாரத்துறை ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
துறையூர் அருகே 19 பேர் பலியான வெடிமருந்து தொழிற்சாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
Published on

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங் கப்பட்டியில் வெற்றி வேல் எக்ஸ்புளோசில் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் 2001-ம் ஆண்டு ஒரு வெடிமருந்து தொழிற்சாலை திறக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் 300 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு வெடி மருந்து மற்றும் உயரிய பட்டாசு வகைகள் தயார் செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொழிற்சாலையின் 2-வது யூனிட்டில், ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டுடன், பென்டா எரித்ரோட்ரல், மெட்டா நைட்ரேட் பவுடருடன் சாம்பலை சேர்த்தே வெடிமருந்து தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது பசை போன்ற பொருள் உருவாகி குழாய் வழியாக இன்னொரு யூனிட்டுக்கு கொண்டு செல்லப்படும்.

அப்போது அதன் உறை வெப்பநிலை 24 டிகிரி சென்டிகிரேடு அளவிலேயே இருக்க வேண்டும். அதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இந்த தொழிற்சாலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். அப்போது அந்த வழக்கு விசாரணை உள்ளூர் போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

பின்னர் மத்திய அரசின் வெடிபொருள் விவகாரத்துறை ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி தொழிற்சாலை மூடப்பட்டது. காலப்போக்கில் மீண்டும் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது அங்கு தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் சட்டவிரோத செயல்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந் தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு என்.ஐ.ஏ. அமைப்பை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்த திருச்சி ஆயுதப்படை போலீசாருடன் வந்தனர். அவர்கள் தொழிற்சாலைக்குள் சென்றதும் அதன் அனைத்து வழிகளும் முழுவதுமாக அடைக்கப்பட் டன. முன்னதாக அனை

வரின் செல்போன்களையும் அதிகாரிகள் வாங்கி வைத்து கொண்டனர். நுழைவு வாயில் பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து தயார் செய்து அனுப்பப்படும் வெடிமருந்துகள் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்று விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெடிமருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான ஹைட்ரோ குளோரிக் ஆசிட், பென்டா எரித் ரோட்ரல், மெட்டா நைட்ரேட் பவுடர் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, அதற்கான உரிமம் முறையாக புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா, மத்திய அரசு வகுத்துள்ள அளவுக்கு அதிகமாக பெறப்பட்டதா? என்பது உள்ளிட்ட விபரங்களை தொழிற்சாலை ஊழியர்களை வரவழைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொழிற்சாலையின் ஒவ்வொரு யூனிட்டாக சென்று வெடிமருந்துகள் இருப்பு, அவை கையாளப்படுவதன் அளவு, அவற் றில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், தினந்தோறும் தயார் செய்யப்படும் வெடிமருந்துகள் எவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது உள்ளிட்டவற்றையும் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

19 பேரை பலி வாங்கிய வெடிமருந்து தொழிற்சாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com