

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மின்சார ரெயில்கள் விளங்குகிறது.
4 வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள்.
இந்த வழித்தடத்தில் 106 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் இதில் பயணம் செய்கிறார்கள். அதிகாலை 3.50 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை மின்சார ரெயில் சேவை இந்த வழித்தடத்தில் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த வழித்தடம் சென்னை கோட்டத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே கால அட்டவணை ஜூன் மாதம் 1-ந்தேதி அடிப்படையில் வெளியிடப்படும். கூடுதல் ரெயில் சேவை அடிப்படையில் நேரம் மாற்றி அமைக்கப்படடு புதிய கால அட்டவணையுடன் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்திற்கான திருத்தி அமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையை சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ளது.
இந்த அட்டவணைபடி திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அனைத்து வார நாட்களும் ரெயில்கள் இயக்கப்படும். இதில் 212 ரெயில்கள் புறப்படும் நேரம் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரெயில்கள் விபரம் வருமாறு:-