புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு - சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கிறது

எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைக்க உள்ளார்.
புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு - சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கிறது
Published on

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

முதலமைச்சராக பொறுப்பேற்றதும், திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார். அதற்காக அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதால், 234 தொகுதிகளில் ஒரு தொகுதி காலியாகிவிட்டது.

இந்தநிலையில் தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு உறுதிமொழி எடுக்க உள்ளனர்.

மேலும் நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைக்க உள்ளார். 13-ந் தேதிக்குள், அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சட்டசபை எப்போது கூடும் என்பது இன்று தெரியவரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com