

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. தவெக காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) மற்றும் வி.சி.க ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 118 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கை எட்டி ஆட்சி அமைத்துள்ளது.
மே 13-ஆம் தேதிக்குள் தவெக சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நாளை தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது.
அனைத்து உறுப்பினர்களுக்கும் நாளை சட்டப்பேரவையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.