தேசிய மருத்துவர்கள் தினம்- தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

தன்னலமற்ற சேவை செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த மருத்துவ தின வாழ்த்துகள்.
National Doctors Day
Published on

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாஜக மூத்த தலைவரும் மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

"Behind the Mask: Who Heals the Healers"

மருத்துவர்கள், நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களை போல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் நோயாளிகளும் மருத்துவர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல் அன்பு செலுத்த வேண்டும்.

தன்னலமற்ற சேவை செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த மருத்துவ தின வாழ்த்துகள். மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்கள் மருத்துவர்களை இறைநிலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.

கொரானா போன்ற பேரிடர் காலங்களில், பல மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் நாளாக இந்த மருத்துவர் தினம் இருக்கட்டும்.

உயிர் காக்கும் மருத்துவர்கள் அனைவரும், தாங்களும் மகிழ்ந்து தம்மிடம் வருபவர்களையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்!

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com