என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக ஆளுநருடன் தேசிய மகளிர் ஆணைய குழு சந்திப்பு
- தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
- சுமார் 7 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குழு விசாரணை மேற்கொண்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பல்கலைகழக நிர்வாகம் மற்றும் மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய விசாரணை நிறைவு பெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை முதல் சுமார் 7 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குழு விசாரணை மேற்கொண்டது.
அப்போது,, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி விவரத்துடன் எப்ஐஆர் வெளியானது குறித்தும் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
மம்தா குமாரி தலைமையிலான தேசிய மகளிர் ஆணையக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கிண்டியில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துப் பேசியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.






