புதிய கட்சிக்கு இந்த அளவு ஆதரவை பார்த்து பல ஆண்டுகளாகிறது - நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 106 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
புதிய கட்சிக்கு இந்த அளவு ஆதரவை பார்த்து பல ஆண்டுகளாகிறது - நாஞ்சில் சம்பத்
Published on: 

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 106 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், தவெக பிரசார செயலாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தவெக பெற்றுள்ளது ஒரு வரலாற்று வெற்றி. தமிழக மக்களிடம் இந்த மாதிரியான எழுச்சியை நான் பார்த்ததில்லை. ஒரு புதிய கட்சிக்கு இந்த அளவு அன்பையும் ஆதரவையும் பார்த்து பல ஆண்டுகளாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com