NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் - நயினார் நாகேந்திரன் பேட்டி

இன்று காலையில் நெல்லையில் வாக்குப்பதிவை பார்த்தேன். இப்போது பாளையங்கோட்டையிலும் பார்க்கிறேன்.
NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் - நயினார் நாகேந்திரன் பேட்டி
Published on

தமிழக பா.ஜ.க. தலைவரும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜெயேந்திரா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன். நிச்சயமாக விஜய்யின் தாக்கம் இந்த தேர்தலில் பெரிய அளவுக்கு இருக்காது. இந்த தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் எதிர்காலத்தில் இருப்பார்களா? இருக்க மாட்டார்களா? என்பதே தெரியாது. இன்று காலையில் நெல்லையில் வாக்குப்பதிவை பார்த்தேன். இப்போது பாளையங்கோட்டையிலும் பார்க்கிறேன்.

தொடர்ந்து இப்போது சாத்தூர் செல்கிறேன். நிச்சயமாக நான் கேள்விப்பட்டேன் சாத்தூரிலேயும் காலையிலேயே 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. நிச்சயமாக மெஜாரிட்டியான எண்ணிக்கையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com