முரசொலி செல்வம் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

முரசொலி செல்வம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சி.பி. ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினுக்கும், செல்விக்கும் ஆறுதல் கூறினார்பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரும் சென்றனர்.
முரசொலி செல்வம் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அக்காள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

இதையறிந்து மராட்டிய கவர்னரான சி.பி. ராதாகிருஷ்ணன் கோபாலபுரத்தில் உள்ள செல்வியின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றார்.

அப்போது அங்கிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை வரவேற்றார். அங்கு முரசொலி செல்வம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சி.பி. ராதா கிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செல்விக்கும் ஆறுதல் கூறினார்.

அவருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கர வர்த்தி ஆகியோரும் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com