

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கயல்விழி தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது.
சீமான் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரான மறைந்த கே. காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மாவீரன் என பெயர் சூட்டினர்.
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு நேற்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், சீமான் மற்றும் அவரது மனைவிக்கு அரசியல் மற்றும் திரை வட்டாரங்களில் இருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.சீமான் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரான மறைந்த கே. காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மாவீரன் என பெயர் சூட்டினர்.
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு நேற்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், சீமான் மற்றும் அவரது மனைவிக்கு அரசியல் மற்றும் திரை வட்டாரங்களில் இருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
மருத்துவமனையில் குழந்தையை தூக்கி மகிழ்ந்த சீமானின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 ஆண்டு இடைவெளியில் பிறந்த தனது தங்கையை கண்டு மாவீரனும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் இருவரும் வீடு திரும்புவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.