ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும்- பா.ஜனதாவினர் வலியுறுத்தல்

ராமநாதபுரம் தமிழகத்தில் எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக மாறி உள்ளது.கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.
ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும்- பா.ஜனதாவினர் வலியுறுத்தல்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்த கதிரவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தரணிமுருகேசன் நியமிக்கப்பட்டார்.

புதிய மாவட்ட தலைவர் நியமிக்கப்பட்ட பிறகு முதல் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கருப்பு முருகானந்தம் பேசியதாவது:-

இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகள் வற்புறுத்தி இருக்கிறோம்.

ராமநாதபுரம் தமிழகத்தில் எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக மாறி உள்ளது. இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக மாவட்ட கட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கட்சி தலைமை செய்யும்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com