

பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள்.
* பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது.
* பாரதிதாசன் பல்கலையில் பயின்ற மாணவர்கள் சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.
* உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இன்று படித்து முன்னேற காரணம் திராவிட இயக்கம்.
* உயர்கல்விக்கு என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி.
* கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.
* உலகம் எந்த வேகத்தில் மாற்றமடைகிறதோ அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து நாமும் ஓட வேண்டும்.
* தலைமைத்துவம் என்பது ஒருவர் ஏற்படுத்தும் தாக்கம் தான்.
* அடுத்து நடக்கப் போவதை கவனிப்பவர்கள் தான் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும்.
* சிறப்பான திட்டமிடல் இல்லாமல் எந்த செயலிலும் இறங்க கூடாது என்கிறார் வள்ளுவர்.
* எங்கு சென்றாலும் அன்போடு, அறத்தோடு செயல்பட வேண்டும்.
* சோதனையான காலத்திலும் நேர்மை, நம்பிக்கை, பொறுமையை கைவிட கூடாது.
* உயர்ந்த சிந்தனை தான் வெற்றி பெற உதவும். நேர்மை தான் அறிவை அளவிட உதவும்.
* வெற்றி பெறும் மாணவர்கள் தங்களுக்கு பின்னால் படித்து வரும் மாணவர்களை கைதூக்கி விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.