தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலித்து பிரதமர் நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகிறேன்- மு.க.ஸ்டாலின்

தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார். புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும்.
தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலித்து பிரதமர் நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகிறேன்- மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தின் ஃபெஞ்சல் புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com