

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சென்ற அவர், கே.சி. பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்ட திமுக-வின் முன்னோடியும் கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான அண்ணன் கே.சி. பழனிசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தேர்தல் குறித்த அவரது ஆலோசனைகளைப் பெற்றேன்.
91 வயதானாலும், உடலில்தான் தளர்வைக் காண முடிகிறதே தவிர, அவரது உள்ளம் உறுதியாக இருக்கிறது. கருப்பு சிவப்பின் கம்பீரம் குறையவில்லை!
கொள்கைப் பற்றுமிக்க மூத்தோரின் வாழ்த்துகளோடு #வெல்வோம்_ஒன்றாக!