மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்

ஒவ்வொரு துறை ரீதியாகவும் முதலமைச்சர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும் -  அமைச்சர் நிர்மல்குமார்
Published on

மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்த பின்னர் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

* சட்டம் ஒழுங்கு குறித்து நாள்தோறும் முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

* ஒவ்வொரு துறை ரீதியாகவும் முதலமைச்சர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

* கடந்த 50 ஆண்டுகளாக புரையோடிப்போயுள்ள துறைகளை முதலமைச்சர் தீவிரமாக ஆராய்கிறார்.

* தவெக வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com