வரும் 10-ந்தேதி கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்- அமைச்சர் புஸ்சி ஆனந்த் அறிவிப்பு

த.வெ.க.விற்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் முதலமைச்சர் விஜய்க்காக விழுந்தது.
அமைச்சர் புஸ்சி ஆனந்த்
Published on

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

* தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த அனைவரும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

* த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் உடன் இருப்போம்.

* தி.நகரில் வெறும் 4 நாட்கள் தான் வாக்கு கேட்டேன், வெற்றிபெற்றேன்.

* 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்காத ஒரு கட்சி த.வெ.க. தான்.

* த.வெ.க.விற்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் முதலமைச்சர் விஜய்க்காக விழுந்தது.

* கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சந்திக்க முதலமைச்சர் விஜய் வருகிற 10-ந்தேதி கரூர் செல்கிறார் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com