மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்தது

மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் 66.66 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்தது
Published on

சேலம்:

தமிழக, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.40 அடியாக உயர்ந்து காணப்பட்டது.

அணைக்கு 29 ஆயிரத்து 307 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் 66.66 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com